[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்... விஷால் விளக்கம்

vishal-explains-about-producers-council-issue

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் விளக்கமளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்ததாகக் கூறி சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விஷாலைத் தற்காலிகமாக நீக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள விஷால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதம் தனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் யாருக்கும் எதிராக தான் செயல்படவில்லை என்று கூறிய விஷால், வார இதழுக்கு தான் அளித்த பேட்டியில் தவறாகவோ, யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தங்களது அணி போட்டியிடும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close