[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

விஜய் சேதுபதி வரிசையில் மெட்ராஸ் கலையரசன்?

kaalakooththu-teaser

2016 ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இதுவரை அதிகம் எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியானது நடிகர் விஜய்சேதுபதிக்கு தான். இதுவரை ஆறு படங்கள் வெளியான நிலையில் புரியாத புதிர் மற்றும் இடம் பொருள் ஏவல் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் ஒரு புறம் தொடர்ந்து திரைக்கு வரும் நிலையில் நடிகர் கலையரசனின் புதிய படங்களுக்கான டீசர், ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் கலையரசனின் இரண்டு புதிய திரைப்படங்களில் டீசர் ட்விட்டரில் வெளியிடப்பட்டன. இயக்குனர் பா.இரஞ்சித், கலையரசனின் ”பட்டினப்பாக்கம்” படத்தின் டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் காலக்கூத்து திரைப்படத்தின் டீசரை ட்வீட் செய்தார்.

காலக்கூத்து: கலையரசனுடன் நடிகர் பிரசன்னா, தன்ஷிகா, சிருஷ்டிதாங்கே நடிக்க எம். நாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பண்ணையாரும் பத்மினியும் புகழ் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். நேற்று டீசர் வெளியானதைத் தொடர்ந்து இன்று #kaalakkoothu டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close