[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஒரே நாளில் மோதும் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'மீன்குழம்பும் மண்பானையும்'

meenkulambum-manpanayum-and-acham-enbathu-madamaiyada-movies-released-onwards

உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘மீன்குழம்பும் மண்பானையும்’ திரைப்படம் மற்றும் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரு படங்கள் இன்று திரையில் மோதியுள்ளன.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா வெளியீடு பல நாட்களாக தள்ளி போன நிலையில் இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் உள்ள ‘தள்ளிப் போகாதே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில், ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘மீன்குழம்பும் மண்பானையும்’ இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் பிரபு, ஊர்வசி, பூஜா குமார், ஆஷ்னா சாவேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாரவிடுமுறைக்கு முந்தைய நாளில் படம் வெளியாகி உள்ளதால் இரு படங்களின் வசூல் வேட்டையும் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close