[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கனவு நனவானது..பிரதமருக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

shankar-paraises-pm-modi-for-demonitisation

ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கருப்பு பணம் ஒழிப்பு எனும் கனவு நனவாகியுள்ளதாக பிரதமர் மோடிக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் அன்னியன். இந்த படத்தின் இறுதிக்காட்சியில் கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப்பெறுவது போல ஷங்கர் காட்சியமைத்திருப்பார். இந்தநிலையில் பிரதமரின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷங்கர், கனவு நனவானதாக கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு தலைவணங்குவதாகவும் ஷங்கர், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close