[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

பல தடைகளை தாண்டிய 'கடவுள் இருக்கான் குமாரு'... நவ.,17-ல் வெளியீடு

case-relief-on-kadavul-irukkan-kumaru

ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவர இருக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இப்படம் நவம்பர் மாதம் 17- ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘லிங்கா’ படத்தை வெளியிட்டு ரூ.6.5 கோடி வசூலித்து தருவதாக ஜி, ஜி பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் ரூ.5.88 கோடி மட்டுமே அதன் உரிமையாளர் தந்தாக சிங்கார வேலன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்பொழுது இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை திரையிட இருக்கிறார். எனவே எனக்கு தர வேண்டிய பணம் வழங்கிய பின்னரே, திரைப்படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் சிங்கார வேலன் தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து, இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி படத்தின் தயாரிப்பாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தினை திரையிட அனுமதி வழங்கினார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ரூ.35 லட்சத்தை வைப்புத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் இந்த தொகையை 4 வாரத்தில் தயாரிப்பாளர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இத்தகைய சர்ச்சையால் இன்று வெளியாக இருந்த இப்படம் தாமதமாக வரும் 17- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close