[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

மும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்?

ranjith-rajini-s-next-location-scouting

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பா. இரஞ்சித் மீண்டும் இயக்கவுள்ள திரைப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் ஏற்பட்டுள்ளது.

கபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் இயக்குனர் பா. இரஞ்சித்திடம் கதை கேட்டுள்ளார். கதை பிடித்து போக இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இத்திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ், தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மூலம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பின் இந்த கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இயக்குனர் பா. இரஞ்சித் லொக்கேஷன் பார்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பா. இரஞ்சித் கடந்தவாரம் மும்பை சென்று திரும்பியுள்ளார். ஏற்கனவே ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படமான பாட்ஷா, மும்பை பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தற்போது இயக்குனர் பா. இரஞ்சித் மும்பையில் லொக்கேஷன் பார்த்த செய்தி ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.

இயக்குனர் ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் 2.0 படப்பிடிப்பு முடிவடைந்ததும், சூப்பர் ஸ்டார் அடுத்த படத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close