[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்: கமல்ஹாசன் நன்றி

humbled-by-your-love-hope-to-live-up-to-expectations-says-kamal-haasan

பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கமல் ஹாசன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ம் தேதி அன்று தனது பிறந்தநாளின்போது ரசிகர்களை சந்திப்பார். அப்போது பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதால், இந்த ஆண்டில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்ததார்.

இனால் நேற்று தனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்தார். இந்நிலையில் நேற்று ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு இன்று தனது டுவிட்டரில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில். ‘அன்பு ரசிகர்களுக்கும், மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்களுக்கும் மேலும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close