[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

கமல் எனும் மகா கலைஞன்...

actor-kamal-hassan-birthday-today


இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடு இணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் 1954-ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் அதாவது நவம்பர் 7-ஆம் தேதி பிறந்தார். இன்று தனது 62-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மிக்கும் கடைசி மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே கலைகளிலே அதிகம் நாட்டம் இருந்துள்ளது. தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தான் கமல்ஹாசன் தொடங்கினார். 1960-ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது வெறும் 6. அன்று அவர் நினைத்திருப்போரா இல்லையோ தெரியாது. ஆனால் இன்று அவர் உலக நாயகன். களத்தூர் கண்ணம்மாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் தோன்றினார்.
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. இது அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகத் தான் அமைந்தது. 1970-80 களில் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 16 வயதினிலே படத்தில் கமலின் சப்பாணி கேரக்டரும், ரஜினியின் பரட்டை கேரக்டருக்கும் இன்றளவிற்கும் மக்கள் மத்தியில் மவுசு இருக்கத்தான் செய்கிறது. ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் கமலுக்கு பல விருதுகளைத் தேடித்தந்தது. 1990-களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. சாதனையாளர்கள் விருதை தேடிச் செல்வதில்லை. விருதுகள் தான் அவர்களை தேடி வரும். ஆம். கமலின் அற்புத நடிப்பு திறமைக்காக 1990-ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை அவருக்கு வழங்கியது. அன்று முதல், அவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றே அழைக்கப்படுகிறார். தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும்பேசப்பட்டவை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. பல சர்ச்சைகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வரூபம்’ படமும் அவருக்கு வெற்றி வாகையை தேடித் தந்தது. தூங்காவனம், பாபநாசம் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பே காணப்பட்டது. நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். 2015 ஆம் ஆண்டுவரை 250 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமல் ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார். சிறந்த பிறமொழிப்படத்திற்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமான படங்கள் கமல்ஹாசன் நடித்திருந்த படமே. கௌரவ முனைவர் பட்டமும் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close