[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இணையத்தில் கொடி- காஷ்மோரா : படம் வெளியான அன்றே லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் திருடி வெளியீடு

kodi-and-kashmora-film-released-in-internet

காஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் வெளியான அன்றே திருடப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான காஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் வெளியான அன்றே, ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் திருடப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தீபாவளி திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அன்றைய தினமே ‌இணையத்தில் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதுபோல், எங்கேயும் நடந்ததாக கேள்விப்பட்டதே இல்லை என்று கூறும் கொடி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மதன் இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளதாக கூறுகிறார்.

ஒரு நிறுவனத்திற்குள் புகுந்து திருடுவது எவ்வளவு சட்டவிரோதமானதோ, அதேபோல்தான் ஆன்லைன் பைரஸியும் என்று கூறும் இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபு சாலமன்,. தாங்கள் கடினமாக உழைத்து தயாரிக்கும் படங்கள் வெளியான அன்றே திருடப்படுவது, ‌தங்களுடைய சொத்து திருட்டு போவது போன்ற மனவலியைத் தருவதாக தெரிவிக்கிறார்.

ஆன்லைன் பைரஸி மிகவும் தவறான ஒன்று என்று கண்டனம் தெரிவிக்கும் இயக்குநரும் திரைப்பட விமர்சகருமான கேபிள் சங்கர், சாட்டிலைட் உரிமைகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளதைப்போன்று யுடியூப், நெட்பிக்ஸ், போன்ற இணையச்சந்தையையும் தமிழ்த்திரையுலகம் பயன்படுத்தக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதெனத் தெரிவிக்கிறார்

அதே நேரத்தில் டிக்கெட்டுகளின் விலை உயர்வு மற்றும் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஆகும் செலவைப் பற்றி விவாதிக்காமல், மக்களை பொறுப்புடன் நடந்துகொள்ள சொல்வது எவ்வகையிலும் சரியான ஒன்றல்ல என்பது திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close