[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

திரைப்படத் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய உத்தரவு

court-ordered-to-arrest-kalipuli-thanu

திரைப்படத் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் அண்மையில் ரஜினியின் கபாலி, விஜய்-யின் தெறி போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

தாணுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் என்பவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 2 லட்ச பணத்தை திரும்ப வழங்கவில்லை எனவும், எனவே பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த மனுவில் அவர் வலியிறுத்தியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் இரண்டு லட்ச ரூபாயைத் டேவிட்டிற்கு வழங்க தாணுவிற்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை ஏற்று தாணு பணத்தை டேவிட்டிற்கு திரும்ப செலுத்தவில்லை.

இதனையடுத்து, தாணு தனக்கு தரவேண்டிய பணத்தை இதுவரை திரும்ப தரவில்லை எனக் கூறி, டேவிட் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தாணுவை நவம்பர் 28-ஆம் தேதிக்குள் கைது செய்ய உத்தரவிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close