[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

அற்புதமான படம் 'தர்மதுரை': சீனுராமசாமிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

mk-stalin-appreciate-dharmaduari-movie

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஜஸ்வர்யாராஜேஷ் ஆகியோர் நடித்த படம் தர்மதுரை. சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து வாழ்வியலை அழகாக காட்டியிருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமியை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை வரிகளில், யுவன்சங்கர் ராஜா இசையிலான பாடல், ‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆளைத்தூக்குதே’ என்ற பாடலும் இசையும் இதயததில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்பகளை ஏற்று அற்புதமான ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கியவர் சீனு.ராமாசமி. அவருக்கு வாழத்துக்கள். மென்மேலும் சமூக சீர்திருத்தப் படங்களை அவர் தர வேண்டும்‘ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close