[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ரிலீசுக்குத் தயாரான பூஜா தேவரியாவின் முதல் படம்

andhra-mess-is-getting-ready-to-release

நடிகை பூஜா தேவரியா நடித்த முதல் படமான ’ஆந்திரா மெஸ்’ ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.

புதுமுக இயக்குனர் ஜெய் இயக்கத்தில் பூஜா தேவாரியா மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் ஆந்திரா மெஸ். ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ எனும் எம்.ஜி.ஆர். பாடலைக் கதைக் கருவாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

’ஷோ போட்’ ஸ்டியோஸ் தயாரித்துள்ள இந்த படம் பல்வேறு காரணங்களால் கடந்த 2 வருடங்களாக வெளிவர முடியாமல் முடங்கிக் கிடந்தது. இந்தநிலையில், படத்தை வரும் டிசம்பரில் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக படம் தாமதமானதாக இயக்குனர் ஜெய் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close