[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்' டிரைலர் வெளியானது

puriyatha-puthir-trailer-launched

விஜய் சேதுபதி, காயத்திரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் புதிர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘புரியாத புதிர்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன், காயத்திரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தீபாவளி தினமான நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தங்களில் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ‘ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனம் வாங்கி உள்ளது.

இப்படத்தை நவம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது படக்குழு. அவ்வாறு வெளியானால் 2016-ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் 7-வது படமாக ‘புரியாத புதிர்’ அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close