[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விஜய்யின் 'பைரவா' டீசர் வெளியீடு

bairavaa-official-teaser-released-by-vijaya-production

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பைரவா’ படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணியளவில் யூடியூப் தளத்தில் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக அமைந்த தெறி படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள 60வது படம் இதுவாகும். டீசரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த டீசர் வெளியான ஓர் இரவுக்குள் ஒரு லட்சத்து 38 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த ‘பைரவா டீசர்’ நேற்று இரவே சமூக வலைதளங்களில் டாப் டிரண்டாகியுள்ளது. விஜயை வைத்து அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கிய பரதன் பைரவா படத்தை இயக்கியுள்ளார். விஜயா புரொடக்சன் தயாரித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு திடீரென பைரவா டீசர் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close