[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

நடிகை த்ரிஷாவின் 'மோகினி'.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

mogini-first-look-poster-release

நடிகை த்ரிஷா நடித்து வரும் மோகினி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் ‘மோகினி’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து இந்தியாவில் 20 நாட்களும், பாங்காக்கில் 10 நாட்களும் நடந்தது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘காஞ்சனா 2’ படத்தின் ஒளிப்பதிவாளரான குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹாரிபாட்டர் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்த குழு, இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சியில் பணிபுரிந்து வருவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அரண்மனை 2, நாயகி படங்களின் வரிசையில் த்ரிஷாவின் அடுத்த திகில் படமாக மோகினி அமைந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்துவந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் அதிகமாக இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close