[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சவரக்கத்தி இசை வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய பூர்ணா

today-savarakathi-audio-launch

சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகி பூர்ணா அழுதது மேடையில் இருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

லோன்வோல்ஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் எழுதி, தயாரித்து, நடித்திருக்கும் படம் சவரக்கத்தி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடந்தது. இதில் பேசிய சவரக்கத்தி படத்தின் கதாநாயகி பூர்ணா அழுதது விழாவில் கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை பூர்ணா பேசுகையில், ‘டான்ஸராக இருந்த நான் நடிகர் பரத்துடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தேன். அதற்கு பல பாராட்டுகளும் கிடைத்தது. அதன் பின் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த எனக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால், மீண்டும் டான்ஸராகவே பயணத்தைத் தொடர முடிவு செய்தேன். இந்தசூழலில் என் மீது நம்பிக்கை வைத்து நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கார் மிஷ்கின். நீண்ட நாட்களுக்குப் பின் பெரியதிரையில் என்னைப் பார்க்கும் போது என் அம்மா ஆனந்த கண்ணீர் விட்டார்’ என்று கண்கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சவரக்கத்தி படத்தில் இயக்குநர் ராம் கதாநாயகனாகவும், இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ளனர். கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார். அரோல் கெரொலி இசையமைத்துள்ளார். இப்படத்தை மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close