[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

குழந்தைகளுக்காக தூக்கத்தை தொலைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் எல்லைகள் கடந்த கனவுகள் இருக்கும்.. ஸ்ருதி ஹாசன்

shruti-haasan-published-about-women-empowerment-video-in-social-media

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள ” பி த பிட்ச்... ஸ்ருதி அன்ப்ளஸ்டு” எனும் விடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு எனது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது, எங்களது உரையாடல்களின் இடையே பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ஒன்றை கவனித்தேன். அது ஏதோ உறுத்தலாகவே இருந்தது. என்னை தூங்கவிடவில்லை. அந்த வார்த்தை என்னவென்றால் “பிட்ச்”- பழமைகளை உடைத்தெறிந்து தன் கனவுகளை நோக்கிப் பறக்கத்துடிக்கும் பெண்ணுக்கு இந்த சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். இவ்வாறாக தொடங்குகிறது அந்த விடியோ பதிவு.

ஒரு இலக்கை நோக்கி பறந்துகொண்டிருக்கும் என்னை தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்தால் நான் அவ்வாறு அழைக்கப்படுவதை பெருமையாகவே கருதுகிறேன். பெண் என்பவள் புனிதமானவள். தனது குழந்தைகளுக்காக தூக்கத்தை தொலைத்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் எல்லைகள் கடந்த கனவுகள் உண்டு என்று அதிரடியாக பேசி நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

பொதுவாக சமுதாயத்தில் பெண்களை இழிவுப்படுத்தி பேசும் ஒரு ஆபாச சொல்லுக்கு, பெண்ணின் வலிமையைக் கொண்டு புதிய பொருளை உணர்த்தும் வகையில் கம்பீரமாக, மிரட்டலான வசனங்களை எழுதி நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அவரது இந்த முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close