[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

மறைந்த நடிகை மனோரமாவிற்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

in-manorama-tamil-actors-request-to-found-manimantapam

தமிழ் திரைப் பட நடிகை மனோரமாவிற்கு மணிமண்டபம் அமைக்க தமிழ் திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா. இவர் தேசிய திரைப்பட விருது, பத்ம ஸ்ரீ, கலைமாமணிவிருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 78- வயதான மனோரமா கடந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று இரவு மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் நினைவு தினமான நேற்று மறைந்த நடிகை மனோரமாவிற்கு தமிழ் திரையுலகினர் சென்னை தேனாம்பேட்டையில் மனோரமாவின் முதலாமாண்டு நினைவேந்தல்‌ நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், விவேக், நடிகர் சங்கத்துணைத்தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன்வண்ணன், நவம்பர் மாத இறுதியில் நடக்கும் பொதுக்குழுவில் மனோரமா பெயரில் விருது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மறைந்த நடிகை மனோரமாவுக்கு மணிமண்டபமும், அமைக்கவும் திரையுலகினர்‌ கோரிக்கை விடுத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close