பிரபல இயக்குனரான லிங்குசாமி தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
அல்லு அர்ஜுன் நேரடியாக தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவே. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க உள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படம் வித்தியாசமான கதை அம்சங்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இப்படத்தின் தொடக்க விழா ஹோட்டல் கிராண்ட் சோழாவில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அல்லுஅர்ஜுன் கூறுகையில், ‘20 வருடமாக சென்னையில் வசித்து வருகிறேன் எனவே தமிழில் நடிக்கவிருக்கும் இப்படம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண்
“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்
மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்
“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே? - நெட்டிசன்கள் கேள்விகள்