JUST IN
 • BREAKING-NEWS ரம்ஜான் அன்று டெல்லியில் தாக்குதல் நடக்கலாம்: உளவுத்துறை
 • BREAKING-NEWS சென்னை: தி.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது
 • BREAKING-NEWS திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
 • BREAKING-NEWS அதிமுகவை பினாமி ஆட்சி என திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது: தம்பிதுரை
 • BREAKING-NEWS 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது
 • BREAKING-NEWS இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்தார் பிரணாப் முகர்ஜி
 • BREAKING-NEWS அமெரிக்காவுடனான நட்புறவால் இந்தியா பயன்பெறும்: மோடி
 • BREAKING-NEWS திருச்சி சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இஃப்தார் விருந்து அளித்தார்
 • BREAKING-NEWS 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.inஇல் வெளியீடு
 • BREAKING-NEWS பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி, 50 பேர் காயம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - காவல்துறை சி.டி.ஆதாரத்தை தாக்கல் செய்தது
வணிகம் 09 May, 2017 02:06 PM

ரிசைன் பண்ணுங்க: சீனியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் செக்!

Cinque Terre

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் அளவில் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முனைப்பில் உள்ளன. இந்த பணி நீக்க நடவடிக்கையால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் உடைய மூத்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

தொழில்நுட்ப துறையில் மந்த நிலை காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து அதிகமாக புது பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாலும், பணி நீக்கம் இந்த வருட இறுதியில் அதிகரிக்கும் என தெரிகிறது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு, 9 மாத சம்பளத்தைக் கொடுத்து தானாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது. இதன்மூலம் ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்ப உள்ளது காக்னிசன்ட். தனது தொழிலாளர்களில் 2.3 சதவீதம் பேரை, அதாவது 6000 ஊழியர்களை, விரைவில் பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் தாங்கள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப் படுவதாக புகார் அளித்துள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, விப்ரோ முதன்மை செயல் அலுவலர் அபித் அலி நீமுச்வாலா, ஊழியர்களிடம் பேசிய போது, நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால் இந்த வருடம் சுமார் 10% ஊழியர்கள் வேலையை விட்டு செல்லும் நிலை நேரிடும் என கூறினார்.

இதேபோல, கேப்ஜெமினி நிறுவனம் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 35 முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊழியர்களை அந்த நிறுவனம் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.

பணி நீக்கம் குறித்து இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களின் வேலை, மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அதன் அடிபடையில் பணி நீக்கம் நடைப்பெறுவதாகவும் கூறியுள்ளது.

’பொதுவாக 20% வளர்ச்சி இருக்கும் தொழில்நுட்ப துறையில், இந்த வருடம் 8% முதல் 10% தான் வளர்ச்சி இருக்கும் என தெரிகிறது. செலவுகளை குறைத்து கொள்ள வருடாவருடம் புதிய ஊழியர்களை நியமிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்களில், மூத்த பணியாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் 3 வருடத்தில் இருந்து 7 வருடம் அனுபவம் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில், ஊழியர்கள் தங்களது திறமைகளை காலத்துக்கு ஏற்றவாறு அதிகப்படுத்தி கொண்டால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும்’ என கூறுகின்றனர் நிபுணர்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads