JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் ஜிஎஸ்டி வரும்போது அமெரிக்க பள்ளிகளில் பாடமாக வைக்கும் நிலை உருவாகும்: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS குமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS நெல்லை: சங்கரன்கோவில் அருகே மேலமருதப்புரத்தில் மின்சாரம் தாக்கி தம்பதியர் பலி
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS கருணாநிதி நலமுடன் உள்ளார்; நாள்தோறும் பத்திரிகையை படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார்: துரைமுருகன்
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS முதல்பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
  • BREAKING-NEWS விளையாட்டில் மாநில, தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS கால தாமதம் ஆனாலும் அதிமுக இரு அணிகள் இணைவது உறுதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தனியார் பாலில் கலப்படம் உள்ளதா என அரசு ரகசியமாக ஆய்வு செய்து வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சென்னையில் காணாமல் போனவர்களில் மே மாதத்தில் மட்டும் 452 பேர் கண்டுபிடிப்பு: சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 31 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
  • BREAKING-NEWS பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு
வணிகம் 09 Mar, 2017 12:38 PM

கணக்குகளை பராமரிக்கத்தான் கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி

பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளை பராமரிக்கத்தான் மற்ற வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க நிபந்தனை விதித்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்றும், ஏ.டி.எம்.களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதிரடியாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பூஜ்யம் இருப்பு அனுமதிக்கப்படுவதால், 10 கோடிக்கும் அதிகமான இந்தக் கணக்குகளை பராமரிக்க கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அதனை ஈடுகட்டவே மற்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்ததாகவும் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads