[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

கலப்படத்தால் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் தவிக்கும் விவசாயிகள்..!

namakkal-farmers-in-sad-conditions

விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், குறைந்த மழையளவு கொண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடிய ஒரு பணப்பயிர் மரவள்ளி கிழங்கு. 12 மாத பயிரான மரவள்ளியை நடவு செய்த பிறகு இருமுறை களை எடுத்து உரம் வைப்பதோடு, வறட்சியான காலத்தில் நீர் பாய்ச்சினால் போதுமானது. அதிகம் செலவு பிடிக்காத இப்பயிரினை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் பெய்த மழையின் காரணமாக மரவள்ளிக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால், நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னர்வரை மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விலை போன நிலையில் தற்போது விலை மிக குறைந்து 6,000 ரூபாய்க்கு மட்டுமே விலைபோகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மரவள்ளி கிழங்கின் மாவில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கொள்ளை லாபம் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து தயாரிப்பதால் மரவள்ளி கிழங்கை மிக குறைந்த விலைக்கு வாங்கி தங்களை வஞ்சிப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே இந்த கலப்படத்தை தடுத்து நியாயமான விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close