[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தண்ணீர் திறக்கக் கோரி 5 மணி நேரமாக போராடிய விவசாயிகள்

madurai-farmers-protest

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மேலுர் 4 வழிச்சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மதுரை திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக்கோரி மேலூர் 4 வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாவினிப்பட்டி, கிடாரிப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. 
இதனால் திருப்பத்தூர், தஞ்சை செல்லும் வாகனங்கள் சிவகங்கை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதேபோன்று பிறபகுதிக்கு செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சக விசாயிகள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close