[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

திருவாரூரில் பரவலாக மழை: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

thiruvarur-rain-farmer-happy

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கங்களாஞ்சேரி, நன்னிலம், பேரளம், கொரடாச்சேரி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close