[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆபத்தை கொண்டுவரும் ஷேல் கேஸ் திட்டம்: தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

farmers-opposed-shale-gas-project

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை, விவசாயிகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, தொடங்குவதற்கு ஒன்ஜிசி பகீரத முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக, பல்வேறு வழிகளில், ஒஎன்ஜிசி-க்கு உதவி வரும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, தற்போது, தனது சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கூட்டத்தையும் கூட்டி, ஒப்புதல் வழங்குவதற்கான பூர்வாங்க பணிகளையும் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒஎன்ஜிசி மற்றும் மத்திய அரசின் முடிவுகளுக்கும், முயற்சிக்கும்., விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஷேல் திட்டத்தை தடுக்க விவசாயிகள் வேண்டுகோள்

சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். அப்படி போற்றப்பட்ட காவிரி ஆறு பாய்ந்தோடும், டெல்டா மாவட்டங்களில், மீத்தேன் எடுக்கும் முயற்சி தோற்றுப்போன நிலையில், ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு திட்டத்தை முன்னெடுக்க, கடந்த கால காங்கிரஸ் அரசின் அனுமதியுடனும், தற்போதைய, பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் ஒத்துழைப்புடனும் தீவிரமாக முயன்று வருகிறது ஒஎன்ஜிசி.

கடலூர் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரையில், அதற்குண்டான பகுதிகளில், ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்க ஒரு வரைபடத்தை தயாரித்திருக்கிறது, ஒஎன்ஜிசி.

காவிரி டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் என கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படும் திட்டத்திற்கான அடிக்கல்லை லாவகமாக நட்ட முயன்று வரும் ஒஎன்ஜிசி, அதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கியிருக்கிறது.

இதற்காக, ஒஎன்ஜிசி தேர்வு செய்திருக்கும் இடம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம். திரும்பிய பக்கமெல்லாம், பரந்துவிரிந்திருக்கும் வயல்வெளிகள்.. சம்பாவும், குறுவையும், தாளடியும், அதனூடாக உளுந்து, துவரை உள்ளிட்ட ஊடு பயிர்களும் விளைவிக்கப்படும் இடம்.

இப்படி, முழுவதுமாக விவசாயம் நடைபெறும் இந்த இடத்தில் தான், ஷேல் கேஸ் திட்டத்திற்காக முதல் அடியை எடுத்த வைக்க முயற்சிக்கிறது, ஒஎன்ஜிசி நிறுவனம்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ள இந்த திட்டத்திற்கு, இந்தியாவில், எந்த கவலையுமின்றி, குறிப்பாக, விவசாயம் தழைத்தோங்கும் இடங்களில் எல்லாம் நிறைவேற்ற முயற்சிப்பது ஏன் என வினவுகின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, கருத்துக் கேட்பு கூட்டம் கூட இதுவரை நடத்தவில்லை. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழைக்கும் தீங்கில் ஒன்றாக, கருத்துக் கேட்பு கூட்டம் தேவையில்லை என மத்திய அரசு மூலம் அறிவிக்கை வெளியிடச்செய்து அதில், ஒஎன்ஜிசி வெற்றியும் கிடைத்திருப்பதாக கூறப்படுவது தான் கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.

மத்திய அரசு இந்த விவகாரத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை, மீறி, ஒஎன்ஜிசிக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு அளிப்பதோடு, அனுமதியும் வழங்குவதாக குற்றச்சாட்டும் எழுகிறது.

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயுத் திட்டத்திற்காக, ஒஎன்ஜிசி நிறுவனம் தனது முதல் அடியை எடுத்து வைப்பதற்குள்ளாத, அதனை முற்றாக தடுத்து நிறுத்துவதோடு, நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்கள் அழிந்துவிடாமல் காப்பாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close