[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கசப்பாக மாறிய கரும்பு..கண்ணீரில் விவசாயிகள்..!

tamil-nadu-sugarcane-farmers-seek-arrears

இனிப்பு என்றாலே நமது நினைவுக்கு வருவது கரும்பு. இந்த கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வு தற்போது கசப்பாகி இருக்கிறது. வரக்கூடிய தீபாவளி பண்டிகை அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையுமா என்பதே ஒரு பெரிய கேள்வி தான்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்பு ஒரு காலத்தில் லாபகரமாக இயங்கிய இந்த ஆலை தற்போது அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான விலையை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு 2 ஆண்டுகளாக விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கான விலை, வாகன வாடகை என்று மொத்தம் 30 கோடி ரூபாய் நிலுவையில்இருப்பதால், விவசாயிகள் சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்

கடன் வாங்கி கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நிலுவைத் தொகை கிடைக்காததால் கடனுக்கான வட்டியை கூட செலுத்த முடியாமல் வங்கி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். போதுமான நிதியில்லாததால், இந்தாண்டு கரும்பு சாகுபடி பரப்பை வெகுவாக குறைத்து விட்டனர்

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் இதுவரை 20க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை என்கின்றனர் விவசாயிகள். சமீபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபாவளிக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்த அதிகாரிகள், இப்போதுவரை அந்த உறுதியை காப்பாற்றவில்லை என்று குறை கூறுகின்றனர்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் மற்றவர்களை போல தாங்களும் பண்டிகையை கொண்டாட முடியுமா என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர். இந்த தீபாவளியாவது இனிக்கும் தீபாவளியாக அமையுமா?

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close