JUST IN
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
 • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
 • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
 • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
 • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
விவசாயம் 03 Sep, 2016 08:39 AM

கடைக்கோடி மக்களும் பயன் பெறும் திட்டம்... கூடலூர் பாண்டியாறு நீரை பவானிக்கு கொண்டு செல்லக் கோரும் விவசாயிகள்

Cinque Terre

தமிழகத்திற்க்கு தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களுடன் போராடி வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உற்பத்தியாகி, கேரளா மாநிலம் வழியாக அரபிக்கடலில் வீணாக கலக்கும் பாண்டியாறு நீரை பவானி அணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த கூடலூர். இப்பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் 14 டிஎம்சி நீர் வீணாக அரபிக் கடலில் கலப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள். இந்த நீரை பவானி சாகர் அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களும் பலன் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்

கடலில் வீணாகும் பாண்டியாற்று நீரை பயன்படுத்த 1960 களில் தமிழக கேரள அரசுகள் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டன இதன் படி அணைகளை கட்டி தேக்கப்படும் 14 டிஎம்சி நீரில் தலா 7 டிஎம்சியை தமிழகமும் கேரளமும் பகிர்ந்து கொள்வதெனவும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கேரளாவே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 1968 -ல் பாண்டியாறு - புன்னம்புழா அணைகட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் சுற்றுசூழல் பாதிப்பு , வனவிலங்குகளுக்கு ஆபத்து என பல காரணங்கள் கூறி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பலன் தரும் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரி கோரிக்கையும் வலுக்கிறது

பாண்டியாற்றின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் கட்டுவதன் மூலமும் பெரிய குழாய்களை அமைப்பதன் மூலமும் சுற்று சூழலுக்கு தீங்கு நேராத வகையில் தமிழகத்திற்க்கு தண்ணீரை திருப்பி விட முடியும் என யோசனை கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்

தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலையில் பாண்டியாற்று தண்ணீரை பவானி சாகர் அணைக்கு கொண்டுவருவதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்கின்றனர் கூடலூர் பகுதி மக்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads