டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி சீசனின் முதல் போட்டியில் வெற்றியடைந்த உற்சாகத்தில் உள்ளது.

Toss Update: Captain @IamSanjuSamson gets it right and says that @rajasthanroyals will bowl first against @DelhiCapitals in Match 7 of #VIVOIPL. Both have made 2 changes to their XI.

Follow the game - https://t.co/SClUCyADm2 #RRvDC pic.twitter.com/wx4gcvS0FF
— IndianPremierLeague (@IPL) April 15, 2021

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் டெல்லி 11 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றிக்கணக்கை தொடரும் முனைப்பில் டெல்லியும், தோல்வியில் இருந்து முனைப்பில் ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com