வேளச்சேரி மறுவாக்குப்பதிவு : ஆண் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அறிவுறுத்தல்

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு : ஆண் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அறிவுறுத்தல்
வேளச்சேரி மறுவாக்குப்பதிவு : ஆண் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அறிவுறுத்தல்

வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் - 92 ல் ஆண் வாக்காளர்கள் வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால் 548 ஆண் வாக்காளர்கள் வாக்களிக்க வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது, இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது.

இதில், 3 அலுவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி எண் 92ல் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 17ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com