கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு: "மேற்கு வங்க மக்கள் கேட்டால் ராஜினாமா செய்வேன்" - அமித் ஷா

கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு: "மேற்கு வங்க மக்கள் கேட்டால் ராஜினாமா செய்வேன்" - அமித் ஷா
கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு: "மேற்கு வங்க மக்கள் கேட்டால் ராஜினாமா செய்வேன்" - அமித் ஷா

"கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மேற்கு வங்க மக்கள் என்னை ராஜினாமா செய்யச் சொன்னால், நான் பதவி விலக தயார்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

கூச் பெஹார் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசிர்ஹாட்டில் நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜியின் வலியுறுத்தலுக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மேற்கு வங்க மக்கள் னது பதவியை ராஜினாமா செய்யச் சொன்னால், நான் பதவி விலக  தயாராக உள்ளேன். நடந்து வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடையும் , முதல்வர் மம்தா பானர்ஜி மே 2-ம் தேதி பதவி விலக வேண்டும்என்று கூறினார்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது சிஐஎஸ்எஃப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது, இதுவரை நான்கு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. வரும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com