"அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார்தான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப்"-அமைச்சர் செல்லூர் ராஜு

"அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார்தான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப்"-அமைச்சர் செல்லூர் ராஜு
"அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார்தான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப்"-அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுகவின் ஹீரோவான எடப்பாடியார்தான் டாப், மற்றவர்கள் டூப் என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார்.

மதுரையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். அப்போது.. "அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அதிமுகவின் ஹீரோவான எடப்பாடியார்தான் டாப். மற்றவர்கள் டூப்.  அவர் மீண்டும் முதல்வர் ஆவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்து விட்டார்கள்.

விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் அனைவராலும் ஈர்க்கப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர்தான் நல்லவர் வல்லவர், மேலும் ராசியானவர், குறிப்பாக அவரது ஆட்சி காலத்தில்தான் வெயில் காலத்திலும் மழை கொட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com