கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் மண்டலத்துக்கு ஒன்றாக 15 சிறப்புக் குழு அமைப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் மண்டலத்துக்கு ஒன்றாக 15 சிறப்புக் குழு அமைப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் மண்டலத்துக்கு ஒன்றாக 15 சிறப்புக் குழு அமைப்பு

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மண்டலத்துக்கு ஒன்றாக 15 சிறப்புக் குழுக்களை அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளில் இந்த சிறப்புக் குழுக்கள் செயலாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாபரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. 

கொரொனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இளைஞர்கள் பெரும் அளவில் தொற்றுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20 புள்ளி 14 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதினர் 18 புள்ளி 37 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் 50 முதல் 59 வயதினர் 17 புள்ளி 97 சதவிகிதமும், 60 முதல் 69 வயதினர் 11 புள்ளி 13 சதவிகிதமும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே 20 முதல் 29 வரையிலான வயதினர் 17 புள்ளி 93 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1 புள்ளி 60 சதகிவிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 59.71சதவீதம் பேரும், பெண்கள் 40.29சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com