கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் - மதுரை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் - மதுரை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் - மதுரை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சி.

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 58 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது விசாகன் கூறுகையில், ''கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களை ஏற்கெனவே பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடைத்து, அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே கடந்த ஓராண்டாக தொடர்ந்து கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 20 வார்டுகளை தேர்ந்தெடுத்து பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும்'' என்று கூறினார். 

மேலும், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் கேர் சென்டர்களை துவங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com