கும்பகோணம்: போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர்!

கும்பகோணம்: போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர்!
கும்பகோணம்: போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர்!

தேர்தலுக்காக பணப்பட்டுவாடாக்கள் பலவிதம். அதில் இது ஒரு புதுவிதம் என்று கூறும் வகையிலான சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செவ்வாயன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், திங்கட்கிழமை முதலே கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் டோக்கனுடன் வந்திருக்கிறார்கள். டோக்கனை கொடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை இலவசமாக தருமாறு கூறியதால் மளிகைக்கடைக்காரர் ஷேக் அகமது அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒருவர் இருவர் எனில் பரவாயில்லை. அடுத்தடுத்து ஆட்கள் டோக்கனுடன் வந்ததால் எதுவும் புரியாமல் போனது மளிகைக்கடைக்காரருக்கு. டோக்கனுக்கு மளிகைப்பொருட்கள் தருவதாக யாருக்கும் தாம் உறுதி அளிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

வருவோருக்கு பதில் கூற முடியாத நிலையில், வேட்பாளர்கள் தந்த டோக்கனுக்கும், தங்கள் மளிகைக்கடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடையின் கதவில் நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார் இந்த மளிகைக்கடைக்காரர். பதவிக்கு வந்ததும் ஏமாற்றுவோர் மத்தியில், ஜெயிப்பதற்கு முன்பே வாக்காளர்களை போலி டோக்கன்கள் தந்து ஏமாற்றியிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com