நாயகன் ஆகிறார் சதீஷ்... பட பூஜையில் பங்கேற்று சிவகார்த்திகேயன் வாழ்த்து!

நாயகன் ஆகிறார் சதீஷ்... பட பூஜையில் பங்கேற்று சிவகார்த்திகேயன் வாழ்த்து!
நாயகன் ஆகிறார் சதீஷ்... பட பூஜையில் பங்கேற்று சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஹீரோவாக அறிமுகமாக நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கான பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, செந்தில் வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷும் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகளின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலகலப்பூட்டிய சதீஷ் தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக ’குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லஷ்மி நடிக்கிறார். இன்று நடந்த படத்தின் பூஜையில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். 

சிவகார்த்திகேயனும் சதீஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறிந்ததே. சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’,’ரெமோ’, ’வேலைக்காரன்’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்டப் படங்களில் சதீஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com