சல்மான் கானின் 'மாஸ்டர்' ஆர்வம்... இந்தி ரீமேக்கில் சில ஆச்சரியங்கள்!

சல்மான் கானின் 'மாஸ்டர்' ஆர்வம்... இந்தி ரீமேக்கில் சில ஆச்சரியங்கள்!
சல்மான் கானின் 'மாஸ்டர்' ஆர்வம்... இந்தி ரீமேக்கில் சில ஆச்சரியங்கள்!

விஜய்யின் 'மாஸ்டர்' இந்தி ரீமேக்கில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்கின்றது படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள பாலிவுட் படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தை இந்தியில் கபீர்சிங், முரத் கேதானி, எண்டமால் ஷைன் ஆகியோர் தயாரிக்க உள்ளனர். இந்நிலையில், தற்போது 'மாஸ்டர்' மற்றும் பவானி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில் 'மாஸ்டர்' கதாபாத்திரத்தில் சல்மான் கானை நடிக்க வைக்க படக்குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

"இது தொடர்பாக முராட் மற்றும் எண்டெமால் குழு கடந்த 30 நாள்களில் சல்மான் கானுடன் இரண்டு சந்திப்பை நடந்தியுள்ளனர். சல்மான் கானுக்கு படத்தின் கதைக்கரு பிடித்துள்ளது. மேலும், அவர் முழுக் கதையை கேட்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார். இருப்பினும், பாலிவுட் பார்வையாளர்களுக்கு ஏற்றார்போல தமிழில் வெளியான 'மாஸ்டர்' கதையில் சில திருத்தங்களை மேற்கொள்ள உள்ளனர்" என்று பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

"சல்மானின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் ஆளுமை மாஸ்டரின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானது. இதுதான் தயாரிப்பாளர்களும் உணர்ந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. திரைக்கதை விவரிப்புகளைக் கேட்ட பின்னரே சல்மான் படத்தில் நடிப்பது குறித்து இறுதி அறிவிப்பை வெளியிடுவார். 'மாஸ்டர்' குழு தற்போது ஸ்கிரிப்டை மீண்டும் எழுதுவதில் பணியாற்றி வருகிறது. சல்மானுடனான அடுத்த சந்திப்பு ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சல்மான் தனது 'ராதே' படத்தை ரம்ஜானுக்கு வெளியிட தயாராகி வருகிறார். படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் மும்பையில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எல்லாம் சரியாக நடந்தால் 'கபி ஈத் கபி தீபாவளி' படத்திற்கு பிறகு சல்மான் கானின் அடுத்த படம் இந்தி 'மாஸ்டர்' ஆகவே இருக்கும். படம் முடிவுசெய்யப்படும் பட்சத்தில் அடுத் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் படத்துக்கான வேலைகள் தொடங்கும்" என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com