தமிழகத்தில் அதிமுக போர்வையில் பாஜக தான் போட்டியிடுகிறது : முத்தரசன்

தமிழகத்தில் அதிமுக போர்வையில் பாஜக தான் போட்டியிடுகிறது : முத்தரசன்
தமிழகத்தில் அதிமுக  போர்வையில் பாஜக தான் போட்டியிடுகிறது : முத்தரசன்

தமிழகத்தில் அதிமுக  போர்வையில் பாஜக தான் போட்டியிடுகிறது என இந்திய கம்யூ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக திங்கள்கிழமை இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சத்தியமங்கலத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவர் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “ அதிமுகவை மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க கூடாது என நாங்கள் சொல்லவில்லை, இந்த அரசு கொத்தடிமையாக உள்ளது. மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. சட்டபூர்வமாக பெற வேண்டிய நிதியை குறிப்பாக புயல் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கான நிவாரண நிதியை கூட பெற முடியவில்லை. முதலமைச்சர் பாம்பு அல்ல, பல்லி அல்ல என கூறுகிறார். தற்போது பாஜகவோடு சேர்ந்ததால் சாமியாராக மாறிவிட்டார், ஸ்டாலின் முதல்வராக முடியாது என சாபமிடும் சாமியாராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாகவும் மற்ற தொகுதிகளில் மறைமுகமாகவும் 234 தொகுதிகளில் அதிமுக என்ற பெயரில் பாஜகதான் போட்டியிடுகிறது. ஆ. ராசா எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என விளக்கமளித்த சூழ்நிலையில், இவர் எப்படி முதல்வர் ஆனார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. முதலமைச்சர் பதவியை ஏலம் எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

வருமான வரித்துறை அண்மைக்காலமாக சங்பரிவார் அமைப்பாக மாறிவிட்டது. திமுக கூட்டணியின் வெற்றி தடுப்பதற்கு குறுக்கு வழியில் பாஜக முயற்சிக்கிறது. எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் மக்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கியது.

அதிமுக 6 சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்புள்ளதை போல திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.4000 கொரோனா நிதியாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது.  மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தான் ஆளவேண்டும் என்பதற்காக தேர்தலில் வெற்றி பெற குறுக்கு வழியில் முயற்சிக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com