டெல்லி போராட்டத்துக்கு 'பரம்பரை விவசாயி' பழனிசாமி குரல் கொடுக்காதது ஏன்? - கே.பாலகிருஷ்ணன்

டெல்லி போராட்டத்துக்கு 'பரம்பரை விவசாயி' பழனிசாமி குரல் கொடுக்காதது ஏன்? - கே.பாலகிருஷ்ணன்
டெல்லி போராட்டத்துக்கு 'பரம்பரை விவசாயி' பழனிசாமி குரல் கொடுக்காதது ஏன்? - கே.பாலகிருஷ்ணன்

'பச்சை விவசாயி', 'பரம்பரை விவசாயி' என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்காததது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் அரூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக தருமபுரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியது:

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக அன்புமணி ராமதாஸ் கூறிவருவது உண்மைக்கு புறம்பானது. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பலை வீசி வருகிறது. தான் பச்சை விவசாயி, பரம்பரை விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி விவசாயிகளுக்கு குரல் கொடுக்காததது ஏன்?

எட்டுவழிச் சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்கோபுரம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தவர, தற்போது தான் ஒரு விவசாயி என கூறிக் கொள்கிறார். விவசாயிகள் இதை ஏற்கவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் அவருக்கு எதிரான மனநிலைதான் உள்ளது.

பெட்ரோல், டீசல், சமையில் எரிவாயு விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகள், தொழலாளர்கள, சிறுகுறு தொழில் முனைவோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை தழுவுவது உறுதி. பாஜக போட்டியிடும் 20 தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

தருமபுரியிலுள்ள ஏராளமான இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வதை தடுக்க திட்டம் தேவை. மேலும், காவிரி உபரிநீர், தென்பெண்ணை ஆறு நீரேற்று திட்டம் உள்ளிட்ட நீராதரங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவைப்படுகிறது. சேலத்தில் நாளை மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர். இந்த மேடையில் எழுப்புகின்ற குரல்கள், தமிழகத்தின் எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்" என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com