திருப்பூர்: தேர்தலால் சூடுபிடிக்கும் கட்சிக் கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் தொழில்

திருப்பூர்: தேர்தலால் சூடுபிடிக்கும் கட்சிக் கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் தொழில்
திருப்பூர்: தேர்தலால் சூடுபிடிக்கும் கட்சிக் கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் தொழில்

சட்டமன்ற தேர்தலுக்கு ஒரே மாதமே உள்ளதால், திருப்பூரில் பல்வேறு கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடன் தொப்பிகள், மப்ளர்களும் தயாரிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. தேர்தல் பரப்புரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கட்சிக் கொடிகள், தொப்பி மற்றும் மப்ளர்கள்தான். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சின்னம் மற்றும் கட்சிக்கொடி வண்ணங்களில் தொப்பி, மப்ளர்கள் போன்றவற்றை அணிந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

இந்நிலையில் இதனை தயாரித்து கொடுப்பதற்கென்றே திருப்பூரில் ஏராளமான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தேர்தலின்போது இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடைபெறும். இதற்கிடையே தற்போது தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால், திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் கட்சி கொடிகளுக்கான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கிறது. ’

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிகளவு ஆர்டர்கள் கட்சிக் கொடிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. கொடி தயாரிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் கேரளாவிற்கு அதிகளவில் கொடிகள் அனுப்பிவைக்கப்பட்டன.  அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இதுவரை ஆயிரக்கணக்கில் கொடிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும், ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கட்சித் தொப்பி மற்றும் மப்ளர் ஆர்டர்களும் அதிகமாக கிடைத்து வருகிறது. தொப்பிகள் விற்பனையும் அதிகமாக உள்ளது என்கின்றனர் அங்கு வேலைசெய்யும் தொழிலாளிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com