தேர்தல் வரலாற்றில் தமிழக சட்டப்பேரவைக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் எத்தனை பேர்?

தேர்தல் வரலாற்றில் தமிழக சட்டப்பேரவைக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் எத்தனை பேர்?
தேர்தல் வரலாற்றில் தமிழக சட்டப்பேரவைக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் எத்தனை பேர்?

தமிழக அரசியல் வரலாற்றிலேயே 2-வது முறையாக மாநில கட்சியுடன் இணைந்து பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழக தேர்தல்களில் பாஜகவின் பாத்திரம் என்ன? இதுவரை அந்த கட்சியிலிருந்து தமிழக சட்டப் பேரவைக்கு சென்ற எம்எல்ஏ-க்கள் எத்தனை பேர்? பார்க்கலாம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், மூத்த தலைவர் அத்வானியும் இணைந்து பாஜக-வை உருவாக்கிய 1980ஆம் ஆண்டு, திமுக-வின் வயது என்ன தெரியுமா 31. அந்த தருணத்தில் அதிமுக உருவாகி 8 ஆண்டுகள் கடந்திருந்தது. தேசிய கட்சியாக பாஜக உருவெடுத்து வந்தபோது, தமிழகத்தில் அக்கட்சியிலிருந்து ஒரு எம்எல்ஏ என்றால் அது வேலாயுதம் தான். 1996ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்கு சென்ற முதல் பாஜக எம்எல்ஏ அவர்.

அதன்பிறகு, 2001ஆம் ஆண்டு முதன் முதலாக மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது பாஜக. திமுகவுடன் கூட்டணி அமைத்த அந்த கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட, 4 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 38.68 ஆக இருந்தது. மயிலாடுதுறையிலிருந்து ஜகவீர பாண்டியன், காரைக்குடியிலிருந்து எச்.ராஜா, மைலாப்பூரிலிருந்து கே.என்.லக்ஷ்மனன், தளி தொகுயிலிருந்து கே.வி.முரளிதரன் ஆகியோர் பாஜக எம்.எல்.ஏ-க்களாக சட்டப்பேரவைக்கு சென்றனர். அதன்பிறகு 2006, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்களில் பாஜக தனித்தே போட்டியிட்டது. அதன் வாக்கு சதவீதமும் தேர்தலுக்கு தேர்தல் தலா 3 சதவீதம் குறைந்துக் கொண்டே வந்தது.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநிலக் கட்சியுடன் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்ள உள்ளது. இந்த முறை அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. ஏற்கனவே 1998ஆம் ஆண்டு ஜெயலலிதா காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தது. ஆனால் அந்த கூட்டணி ஓராண்டே நீடித்தது. 13 மாதங்களில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து கூட்டணியிலிருந்து வெளியேறி, அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசை கவிழ்த்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதன்பிறகு பாஜகவுடன் அவர் கூட்டணி அமைக்கவில்லை. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்தது. ஆனால், வெற்றி அமையவில்லை.

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே பாஜக தொடரும் நிலையில், அக்கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. கந்தசஷ்டி விவகாரம், வெற்றிவேல் யாத்திரை இவையெல்லாம் பாஜகவின் பலமாக பார்க்கப்படுவதால், இந்த முறை இரட்டை இலக்கங்களில் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடம்பெறுவார்கள் என அக்கட்சி நம்புகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com