"கொரோனாவில் இழந்தோம்... தேர்தலே நம்பிக்கை!" - இது ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் குரல்

"கொரோனாவில் இழந்தோம்... தேர்தலே நம்பிக்கை!" - இது ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் குரல்
"கொரோனாவில் இழந்தோம்... தேர்தலே நம்பிக்கை!" - இது ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் குரல்

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பீக்கரை உருவாக்கிய பீட்டர், வெர்னர், எட்வின் என இந்த மூவரின் கூட்டணியை விஞ்சும் அளவுக்கு தேர்தல் நேரங்களில் பட்டி தொட்டி தொடங்கி ஸ்மார்ட் சிட்டி வரை அலப்பறை கொடுக்கின்ற கருவியாக பயன்படுத்துவதில் நம் ஊர் அரசியல் கட்சி நிர்வாகிகளின் சாமர்த்தியம் அடங்கியுள்ளது.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்' என கொக்கரிக்கும் சேவலைப் போல திரும்புகிற திசையெங்கும் லவுட் ஸ்பீக்கரின் ஒலிதான். லைவ், ரெக்கார்டாட் என ஓயாமல் ஸ்பீக்கர்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அரசியல் தலைவர்களுக்கு அந்த ஒலி சங்கீதம், சில மக்களுக்கு சங்கடம். அதேநேரத்தில் அந்த ஒலி சிலருக்கு வாழ்வாதாரம். அவர்கள்தான் ஒலிபெருக்கி அமைப்பாளர்கள். 

"என்னதான் கல்யாணம், காதுகுத்து என சுப நிகழ்ச்சிகளில் எங்களின் தேவைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு இருக்குற டிமெண்டே வேற தம்பி" என்கின்றனர் இந்த தொழிலில் ஈடுப்பட்டு வருபவர்கள். 

"தேர்தல்னு வந்துட்டாலே எங்களுக்கு கொண்டாட்டம்தான். எங்க தாத்தா காலத்துல கூம்பு குழா லவுட் ஸ்பீக்கர அப்போதைய காங்கிரஸ் பிரசாரத்துக்கு கட்டியிருக்காங்க. எலெக்‌ஷன் டைம்ல எங்களுக்கு கிராக்கி அதிகம் இருக்கும். இந்தசமயத்துல நேரம் காலம் பாக்காம உழைப்போம். 

பிரசாரத்துக்கு போகுற வண்டி வாடகை, மைக் செட், ஸ்பீக்கர் செட்டுன்னு கடையில இருக்குற எல்லா பொருளுமே நாள் வாடகைக்கு போயிருக்கும். அதனால அதிக வருமானம் கிடைக்கும். அது போக மேடை அமைக்குறது, பிரசார வாகனத்துல லைட் கட்டுறது, கூட்டத்துக்கு சேர் போடுறதுன்னு நிறைய வருமானம் எங்க தொழில்ல எலெக்‌ஷன் டைத்துல தான் கிடைக்கும். 

ஒருநாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு எங்க உழைப்பு மூலமா வருமானம் பாப்போம். தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான பேர் இந்த ஒலிபெருக்கி தொழிலை நம்பி இருக்கோம். இந்த கொரோனவுல நாங்க நிறையவே இழந்துட்டோம். அந்த இழப்புக்கு நிகரா இந்த தேர்தல் எங்களுக்கு அமையணும்" என சொல்கிறார் ஒலிபெருக்கி அமைப்பாளரான செல்வா.  

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com