‘17ம் ஆண்டு நினைவு’ - மறக்க முடியாத இரட்டை கோபுர தாக்குதல் 


உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் விமானங்கள் மோதி தகர்க்கப்பட்டதன் 17 ஆவது ஆண்டு நினைவுதினம், அமெரிக்காவில் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, அவர்களது உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.‌

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் அல்-கைதா பயங்கரவாதிகள் விமானத்தை கடத்திச்சென்று உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது மோதி தகர்த்தனர். இதில் வானுயர்ந்த இரட்டை கோபுரங்கள் தகர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேநேரத்தில் பென்டகன், பென்சில்வேனியா பகுதிகளிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உலகை உலுக்கிய இந்த கொடூர தாக்குதலின் நினைவு நாளையொட்டி, நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுர நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதே போல் பென்டகன், பென்சில்வேனியா ஆகிய பகு‌திகளிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, அங்கு கூடிய திரளான மக்கள் உயிரிழந்தவர்களுக்காக சில ‌நிமிடங்கள் வரை மவுன அஞ்சலி செலுத்தினர். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் அப்போட்டாபாத்தில் பதுங்கி இருந்த அல்-கைதா தலைவர் ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்றது.

POST COMMENTS VIEW COMMENTS