பெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது


சவுதி அரேபியாவில் உணவகம் ஒன்றில் பெண்ணுடன் அமர்ந்து உணவருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பெண்களுக்கு எதிராக சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்‌றன. இந்நிலையில் எகிப்து இளைஞர் ஒருவர் உணவகத்தில் தன்னுடன் பணிபுரியும் சக பெண் பணியாளருடன் அமர்ந்து உணவு அருந்தியதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, சட்டத்தை மீறி செயல்பட்டதாக அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

POST COMMENTS VIEW COMMENTS