சவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்!


சவுதி அரேபிய இளவரசியின் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் பாரிஸில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருட்டு போயுள்ளதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் ரிட்ஸ் என்ற புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்குள்ள சொகுசு அறை ஒன்றில் சவுதி அரேபிய இளவரசிகளில் ஒருவர் தங்கியுள்ளார். அவர் தனது அறையில் விலையுயர்ந்த நகைகளை வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த நகைகளைப் பார்த்தபோது அது மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் புகார் கொடுத்துள்ளார்.

Read Also -> கல்யாணம் ஆயிடுச்சுன்னு நம்பவே முடியவில்லை: சுவாதி

அறையில் இருந்த மற்ற பொருட்கள் எதுவும் மாயமாகவில்லை. நகைகள் மட்டும் திருடு போயுள்ளது. இதன் மதிப்பு 930,000 அமெரிக்க டாலரா கும். இந்திய மதிப்பு சுமார் ஆறே முக்கால் கோடி ரூபாய். புகார் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ள ஹோட்டல் நிர்வாகம் இளவரசியின் பெய ரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பாகியுள்ளது.

இதே ஹோட்டலில் கடந்த ஜனவரி மாதம் பல லட்சம் மதிப்புள்ள நெக்லஸ் மற்றும் நகைகள் திருடப்பட்டன. பின்னர் போலீசார் திருடர்களை கைது செய்து நகைகளை மீட்டனர். கடந்த வருட இறுதியிலும் இதே போன்ற சம்பவம் இங்கு நடந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS