பெட்ரோலுக்கு பதில் வோட்காவில் இயங்கும் பைக் !


பெட்ரோலுக்கு பதிலாக வோட்காவை பயன்படுத்தி ஓடும் புதிய ரக இருசக்கர வாகனத்தை அமெரிக்காவைச் சேர்ந்தவர் கண்டுப்பிடித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எரிசக்திகளால் இயங்காத வாகனங்களை உருவாக்கி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், எரிப்பொருள் தேவையை குறைக்கும் நடவடிக்கையாக எலக்ட்ரி பைக், பேட்டரி பைக் என மோட்டார் பைக்குகள் பல அவதாரங்களை எடுத்து வருகின்றனர். உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சவால்களை முறியடிக்கக்கூடிய வகையில் தற்போது வோட்காவால் செல்லக்கூடிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மாண்டோனா பகுதியை சேர்ந்தவர் ரயான் மொண்டொகொமரி. 41 வயதாகும் இவர் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்திவருகிறார். பைக் ப்ரியரான இவர், பல மாதங்களாக முயற்சி செய்து 1980 ஆண்டில் வாங்கிய யமஹா XS650 என்ற பழைய மாடல் பைக்கில் பெட்ரோலுக்கு பதிலாக வோட்காவை பயன்படுத்தி புதிய பயணத்தில் வெற்றிக்கண்டுள்ளார்.

பழுதடைந்து இருந்த தனது பழைய மாடல் யமஹா XS650 பைக்கை சரி செய்து வோட்காவில் இயங்கும் என்ஜினை உருவாக்கியுள்ளார். மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 181 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வோட்கா பைக் இயங்கியதாக ரயான் தெரிவித்துள்ளார். வோட்கா பைக்கிற்கு சடன் விஸ்டம் என்று பெயரிட்டுள்ளார்.

மேலும் இந்த எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் வோட்காவை குடிக்க முடியாது என்றும் ரயான் கூறுகிறார். மொத்தமாக வோட்கா பைக்கிற்கு 3.5 லட்சம் வரை செலவிடப்பட்டதாகவும், சந்தையில் விற்பனைக்கு வந்தால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் பெருமிதத்துடன் ரயான் கூறுகிறார்.

POST COMMENTS VIEW COMMENTS