“பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது பாகிஸ்தான்” - ஐ.நா.வில் இந்தியா பதிலடி


பயங்கரவாதத்தை ஏவிவிட்டு இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து சதி செய்து வருவதாக ஐ.நா.வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நிலை கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலிகா லோதி‌, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு காஷ்மீர் மக்கள் துயரத்தை அனுபவித்து வருவதாகவும் மலிகா லோதி தெரிவித்திருந்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்து பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ஸ்ரீநிவாஸ் பிரசாத், உலக நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்கான உயர் நிலைக் கூட்டத்தில் இத்தகைய பிரச்னைகளை எழுப்புவது தவறானது எனத் தெரிவித்தார். மேலும் பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்ப‌‌ளித்து வருகிறது என்றும், அந்தச் சுதந்திரம் பயங்கரவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும் பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

Read Also -> நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு

POST COMMENTS VIEW COMMENTS