நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு


துபாயில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏர்பஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 11 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துபாயில் இருந்து 521 பயணிகளுடன் நியூயார்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, பயணிகள் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நூறு பயணிகளை பரிசோதித்த விமான நிலைய மருத்துவர்கள், அவர்களில் 11 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நோய் பரவும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கி‌ல், அந்த ஏர்பஸ் விமானமும் தனி இடத்தில் நிறுத்தப்பட்டு, தூய்மை செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

Read Also -> “பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது பாகிஸ்தான்” - ஐ.நா.வில் இந்தியா பதிலடி 

POST COMMENTS VIEW COMMENTS