ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி!


ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ (Hokkaido) என்னும் தீவு உள்ளது. இங்கு இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Read Also -> அபிராமியும் சுந்தரமும் விஜய்யும் இதைக் கொஞ்சம் படியுங்கள் !

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 3 மில்லியன் வீடுகளில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள் ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

Read Also -> “மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..!  

கடுமையா ன நிலச்சரிவு காரணமாக அட்சுமா பகுதியில் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அங்கு மட்டும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சேத விவரங்கள் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

POST COMMENTS VIEW COMMENTS