சூட்கேஸில் ஒளிந்து தப்பிக்க முயன்ற இளம்பெண் ! 


சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண் பாதுகாப்புப் படை வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். பாதுகாப்புப் படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சூட்கேஸில் ஒளிந்து கொண்டு துருக்கிக்குள் நுழைய முயன்ற உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் பிடிபட்டார். துருக்கிக்கு சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து பார்த்த அவர்கள் இளம்பெண் ஒருவர் சூட்கேஸினுள் ஒளிந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்த பெண் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அந்தப்பெண்ணுக்கு துருக்கியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதால், சூட்கேஸில் ஒளிந்து சென்று துருக்கியில் குடியேற முயன்றதாக தெரிகிறது.

Read Also -> ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மரணம்! 

POST COMMENTS VIEW COMMENTS