குட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ


தென் ஆப்பிரிக்கா தேசிய பூங்காவில் சேற்றில் சிக்கிய குட்டி யானையை பெரிய யானைகள் சேர்ந்து காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

குருகர் தேசிய பூங்காவில் உள்ள யானைகள் சேற்றில் உற்சாகமாக உருண்டு புரண்டு குளித்து கொண்டிருந்தன. அப்போது பெரிய யானைகள் சேற்றிலிருந்து ஏறி கரைக்குச் சென்றன. அதனுடன் ஆட்டம்போட்ட குட்டி யானை மேலே ஏற முடியாமல் சேற்றில் தலைக்குப்புற தவறி விழுந்தது. 

          

மீண்டும் முயற்சி செய்தபோதும் குட்டி யானையால் மேலே ஏற முடியவில்லை. குழந்தைகள் போல தடுமாறிக் கொண்டிருந்த அந்தக் குட்டியை, மற்ற இரு யானைகளும் மேலே ஏற உதவி செய்தன. சில நிமிட போராட்டத்துக்குப் பின் அந்தக் குட்டி மேலே ஏறி வந்ததும், உற்சாகம் பொங்க ஓடியது. இந்தக் காட்சி தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS